தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் சன் பிச்சர்ஸ்.. முன்னணி நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலைமையா
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிச்சர்ஸ். எந்திரன் படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான சன் பிச்சர்ஸ், அதன்பின் பல ஆண்டுகள் படங்களை விநியோகம் மட்டும் செய்து வந்தது.
இதன்பின், கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தை தயாரித்து மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை தயாரிக்க துவங்கியது.
தோல்வியை சந்திக்கும் சன் பிச்சர்ஸ்
அப்படி கடந்த ஆண்டு சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தயாரித்துள்ள சன் பிச்சர்ஸுக்கு, பீஸ்ட் படமும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் நன்றாக இல்லை விஜய்யின் ரசிகர்களே கூறுகின்றனர்.
முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஜய் நடித்த படங்களுக்கே இப்படியொரு நிலைமையா என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri