தளபதி விஜய் குறித்து முதன்முறையாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பாளர் கூறியது, ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு..இதோ.

Vijay Sun pictures Kalanithi Maran
By Balakumar Dec 29, 2020 11:56 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இதனால் செம்ம உற்சாகத்தில் ரசிகர்கள் அனைவரும் உள்ளனர், அதுமட்டுமின்றி இப்படம் வெளியான பின்பு தான் தளபதி விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் இதன் அறிவிப்பு வீடியோவில் தளபதி விஜய், கலாநிதி மாறன் மற்றும் நெல்சன் உள்ளிட்டோர் இருந்தனர், அந்த வீடியோ பெரிய அளவில் ட்ரெண்டானது.

இதனிடையே ட்விட்டரில் தனது முதல் பதவியை பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தளபதி விஜய் குறித்து பதிவிட்டுள்ளார்.

ஆம் அந்த பதிவில், "உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மீண்டும் தளபதி விஜய்யுடன் 4வது முறையாக சன் பிக்ச்சர்ஸ் இணைவதில் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US