ஜெயிலர் 2ல் நடித்தது ரஜினியின் டூப் என வந்த ட்ரோல்.. சன் பிக்சர்ஸ் கொடுத்த பதிலடி
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோ மூலமாக தான் படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு தரப்பினர், அதில் ரஜினி நடிக்கவில்லை டூப் பயன்படுத்தி ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர் என ட்ரோல் செய்தனர். ரஜினி ஒரே ஒரு காட்சியில் இறுதியில் மட்டும் வந்து நடித்து இருக்கிறார் என்றும் விமர்சித்தனர்.
மேக்கிங் வீடியோவை வெளியிட்டு பதிலடி
இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது சன் பிக்சர்ஸ் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
ரஜினி தான் மொத்த காட்சிகளிலும் நடித்தார் என்பதை காட்டும் வகையில் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட்டு இருக்கின்றனர்.
வீடியோ இதோ.