பீஸ்ட் படத்துக்கே கொடுத்தீங்க.. கூலி படத்திற்காக நீதிமன்றம் சென்ற சன் பிக்சர்ஸ்
சமீபத்தில் ரிலீஸ் ஆன கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் 4 நாட்களில் 400 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே வன்முறை அதிகமாக இருக்கும். அதையே காரணம் காட்டி சென்சார் போர்டு கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கி இருந்தது.
18 வயதுக்கு குறைந்தவர்கள் கூலி படம் பார்க்க முடியாத நிலை, அதனால் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி'யை கூலி பெற முடியவில்லை.
வழக்கு
இந்நிலையில் கூலி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டு சன் பிக்சர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இருந்த KGF, பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக மனுவில் கூறி இருக்கின்றனர்.
நீதிமன்றம் என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
You May Like This Video