சூப்பர் சிங்கர், சரிகமப நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக சன் டிவியில் வரும் புதிய சிங்கிங் ஷோ..
சூப்பர் சிங்கர் - சரிகமப
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக பல பருவங்களை கடந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 11 நடைபெற்று வருகிறது.

அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சிக்கும் மக்கள் பேராதரவை அளித்து வருகிறார்கள்.

சன் சிங்கர்
இந்த நிலையில், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக சன் டிவி தங்களுடைய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான 'சன் சிங்கர்' ஷோவை மீண்டும் கொண்டு வருகிறார்கள். இதுவரை ஐந்து சீசன்கள் சன் சிங்கரில் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வரவில்லை.

ஆனால், தற்போது சன் சிங்கர் ஜூனியர் ஷோ விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும், அதற்கான ஆடிஷன் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சன் சிங்கர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.