பிக்பாஸ் 9 சீசன் WIld Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா?
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக 100 நாள் என்டர்டெயின்மென்ட்டுக்கு பெயர் போன ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
முதல் சீசன் பற்றி மக்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதன்பின் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 5ம் தேதி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்று பார்த்தால் ஒரே சண்டை, அசிங்கமாக பேச்சுகள் என முகம் சுழிக்கும் நிறைய விஷயங்கள் உள்ளனர்.
பிக்பாஸ் 9வது சீசன் சரியே இல்லை என மக்களும், ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வைல்ட் கார்ட்டு
இந்த வாரம் பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து ஆதிரை சௌந்தரராஜன் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துவிட்டது.
இந்த நேரத்தில் ஒரு வைல்ட் கார்ட்டு என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. அது யார் என்றால் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்னம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள திவ்யா கணேஷ் தான் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது, ஆனால் இது உண்மையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
