முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! எதிர்பார்க்காத ஒரு முடிவு
சன் டிவி சீரியல்கள் தான் தற்போது டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகின்றன. மேலும் விஜய் டிவி தொடர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் ரேட்டிங்கில் தொடர்ந்து சறுக்கி வருகின்றன. இதை சமாளிக்க விஜய் டிவி புது சீரியல்கள் சிலவற்றை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடியப்போகிறது என தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
ராதிகா தயாரித்து வரும் இந்த தொடரில் அவரே முதலில் நடித்து வந்தார், ஆனால் அவர் இடையில் விலகிவிட்டார். தற்போது அவர் கலைஞர் தொலைக்காட்சிக்காக பொன்னி C/o ராணி என்ற சீரியலை எடுத்து வருகிறார். அந்த சீரியல் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில் தான் சித்தி 2 கிளைமாக்ஸ் விரைவில் வருகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
எதிர்பார்க்காத நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதே என பலரும் வருத்தத்தை கூறி வருகின்றனர்.