சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் என்று எப்போது தொடங்குகிறது... வெளிவந்த தகவல்
எதிர்நீச்சல் 2
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
கோலங்கள் தொடரை தொடர்ந்து திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் எதிர்நீச்சல்.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
பின் தொடர் டிஆர்பியில் கொஞ்சம் பின்வாங்க தொடரும் கடந்த ஜுன் 2024ல் முடிவுக்கு வந்தது.
ஆரம்பம்
எதிர்நீச்சல் முடிவுக்கு வந்ததில் இருந்து 2ம் பாகம் எப்போது என ரசிகர்கள் அதிகம் கேட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அறிவிப்பும் வந்தது. எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் சில புதிய நடிகர்கள் கமிட்டாகியுள்ளனர்.
புரொமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் எதிர்நீச்சல் 2ம் பாகம் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வந்துள்ளது. வரும் திங்கள் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.