எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. போட்டோ இதோ
எதிர்நீச்சல்
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக அமைந்தது எதிர்நீச்சல் சீரியல். திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் எதிர்நீச்சல் முதல் பாகம் செம வெற்றியடைந்தது.
ஆனால் மாரிமுத்து அவர்கள் இறப்பிற்கு பின் சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றது என்றே கூறலாம்.
ரீ-என்ட்ரி
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் எதிர்நீச்சல் 2ம் பாகம் தொடங்கப்பட்டது. தற்போது கதையில் குணசேகரனை வீட்டின் உள்ளே வர பெண்கள் அனுமதித்துவிட்டு இப்போது வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள்.
குணசேகரன், சக்தி தனது கையில் இருந்து விலக கூடாது என மொத்த பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கிறார்.
ஜனனிக்கு முன்பு சக்திக்கு குணசேகரன் கல்யாணம் செய்து வைக்க பார்த்த பெண் குந்தவை மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.