எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள், எதிர்நீச்சல் சீரியலில் அதிரடி திருப்பங்கள்- வீடியோவுடன் இதோ
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் வில்லனாக நடித்து வந்தவர் தான் மாரிமுத்து, ஆனால் அவர் இப்போது நம்முடன் இல்லை, அவருக்கு பதில் ஆதி குணசேகரனாக இப்போது வேல ராம மூர்த்தி நடித்து வருகிறார்.
அவர் சீரியலில் சில காட்சிகளில் மட்டுமே வந்துவிடும் பின் காணாமல் போனார்.
அதிரடி புரொமோ
ஒருபக்கம் ஊர் திருவிழா, இன்னொரு பக்கம் அப்பத்தாவின் நிகழ்ச்சி. இந்த நிகழ்வுகளில் யார் யாருக்கு என்ன ஆகப்போகிறது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் பரபரப்பு புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் இனி குணசேகரன் கதாபாத்திரம் கொஞ்ச நாளைக்கு வராது என்று பார்த்தால் புரொமோவில் அதிரடியாக வந்துள்ளார்.
அவரை புரொமோவில் பார்த்த ரசிகர்கள் இவர் கதாபாத்திரம் கொஞ்ச நாளைக்கு வராது என்று பார்த்தால் வந்துவிட்டாரே அப்போது கதை விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதேபோல் கதிர் ஏதோ ஒரு பெண்ணுடன் போனில் சிரித்து சிரித்து பேசுவது போல் காட்டுகிறார்கள், எனவே அவர் யார் புதியதாக, யாராக இருக்கும் என பல குழப்பங்களுடன் ரசிகர்கள் சீரியலை காண ஆவலாக உள்ளனர்.