புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்?
சன் டிவி
மற்ற மொழி தொடர்களில் நடித்தவர்கள் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்து கலக்குவது புதியதாக நடக்கும் விஷயம் இல்லை.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி கலைஞர்கள் தமிழ் பக்கம் நிறைய பேர் வந்துள்ளனர். அப்படி தெலுங்கு சின்னத்திரை நடிகையாக இருந்து தமிழ் சீரியல் பக்கம் வந்தவர் தான் மான்யா ஆனந்த்.
இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல என்ற ஹிட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
புதிய தொடர்
வானத்தை போல சீரியல் எப்போதோ முடிவுக்கும் வந்துவிட்டது. சீரியலுக்கு பின் மான்யா தனது இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் நடிகை மான்யா புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மான்யா சன் டிவியில் இருந்து புதிய தொடருக்காக ஜீ தமிழ் பக்கம் வந்துள்ளார். மற்றபடி தொடர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.