சன் டிவியின் கயல் சீரியல் நேரம் மாற்றப்படுகிறதா?.. டிஆர்பி தாண்டி இதுதான் காரணமா?
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் நியாபகம் வருவது சீரியல்கள் தான்.
காலை முதல் இரவு வரை தொடர்ந்து விதவிதமான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
நேரம் மாற்றம்
டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடரின் நேரம் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. அது என்ன சீரியல் என்றால் சைத்ரா மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் தான்.
இதில் ஒரு கதை மாற்றமும் இல்லாமல் பிரச்சனை அதை கயல் தீர்ப்பது என இப்படியே கதை நகர்ந்து வருகிறது.
தற்போது புதியதாக தொடங்கப்பட்ட ஆடுகளம் சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாவதால் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை 7.30 மணிக்கு ஒளிபரப்ப சன் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர லட்சுமி மற்றும் புன்னகை பூவே தொடர்கள் முடிவுக்கு வர இருப்பதும் வினோதினி, பராசக்தி, தங்க மீன்கள் தொடர் புதியதாக களமிறங்க இருப்பதால் பல சீரியல்களின் நேரம் மாற்றம் நடக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைக்கு கயல் தொடர் பற்றிய தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
