மீண்டும் புதிய சீரியல் மூலம் இணையும் சன் டிவி சீரியலின் ஹிட் ஜோடி.. முழு தகவல்
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நல்ல நல்ல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது.
சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த சன் குடும்பம் விருதுகள் 2025 நிகழ்ச்சியில் சிறந்த நாயகன்-நாயகிக்கான விருதினை முன்று முடிச்சு ஹீரோ நியாஸ் கான் மற்றும் சுவாதி கொண்டே வாங்கினார்கள்.
சிறந்த சீரியலுக்கான விருது கயல் தொடர் குழுவினருக்கு அளிக்கப்பட்டது.
புதிய தொடர்
தொடர்ந்து வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பும் சன் டிவி புதிய தொடரையும் களமிறக்கிய வண்ணம் உள்ளனர். தற்போது ஒரு புதிய சீரியலுக்கான அறிவிப்பு தான் வந்துள்ளது.
மிஸ்டர் மனைவி சீரியல் புகழ் ஜோடி பவன் மற்றும் டென்ஜனி இருவரும் புதிய சீரியலில் ஜோடி சேர்ந்துள்ளார்களாம். விஷன் டைம்ஸ் தமிழ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடரின் பூஜை இன்று போடப்பட்டதாக கூறப்படுகிறது.