சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கும் சன் டிவி சீரியல் நடிகை! ஹீரோ யார் பாருங்க
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஹிமா பிந்து. அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் இலக்கியா சீரியலில் அவர் நடித்து வருகிறார்.
ஹிமா பிந்துவுக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது நடிப்பு இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
சினிமா என்ட்ரி
இந்நிலையில் தற்போது ஹிமா பிந்து சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் இதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருக்கிறார் என்றாலும் தற்போது ஹீரோயினாக முதல் முறையாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
கவுண்டமணி நீண்ட காலம் கழித்து தற்போது நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் தான் ஹிமா பிந்து ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
அந்த படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்களை ஹிமா பிந்து வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர் பட புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
