முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்..
சன் டிவி
மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் எதிர்நீச்சல் 2, மூன்று முடிச்சு, கயல், சிங்கப்பெண்ணே என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இலக்கியா
இந்த வரிசையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய சீரியல்தான் இலக்கியா. சாம்பவி குருமூர்த்தி, நந்தா லோகநாதன், காயத்ரி சாஸ்திரி ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை 967 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், 985 எபிசோடுகளுடன் இலக்கியா சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி எபிசோட் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. இலக்கியா சீரியல் முடிவடையப்போகிறது என்பதால், அந்த சீரியலின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ரூ 100 கோடியில் மும்பையில் வீடு: ஹிரித்திக் ரோஷனின் மிரள வைக்கும் ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு News Lankasri