உயிராக காதலித்த கயலுக்கு ஷாக்கிங் தண்டனை கொடுத்த எழில்... கயல் பரபரப்பு எபிசோட்
கயல் சீரியல்
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய ஜோடியுடன் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் கயல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் புதிய ஜோடியாக இணைய தொடங்கப்பட்ட இந்த சீரியல் 5 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அப்பாவை இழந்த தனது குடும்பத்தை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுத்து அவர்களுக்காகவே வாழ்பவர் தான் கயல்.

தனது காதல் கூட முக்கியம் இல்லை, குடும்பத்தினர் முன்னேற்றம் தான் முதலில் வேண்டும் என இருந்தவர். எப்படியோ குடும்பத்தை பார்த்துக்கொண்டே தனது காதலித்தவரை திருமணமும் செய்தார்.
அதன்பின்பும் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்த கயலுக்கு இப்போது அவரது தங்கை ஆனந்தி திருமணத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்கப்போகிறார்.

எபிசோட்
பாலு, எழில் வாழ்க்கையையே கேள்விக்குறியாக ஆக்கிய ஒரு நபர், இதனால் அவரை கொலை செய்யும் அளவிற்கு கடும் கோபத்தில் உள்ளார்.
ஆனந்தி பாலுவை காதலிக்கிறார் என்பதை தெரிந்ததும் எழில் செம கோபப்படுகிறார். பின் ஆனந்திக்கும் கௌசிக்கும் தான் திருமணம் நடக்க வேண்டும், அதற்கு சம்மதிப்பாயா இல்லையா என கயலிடம் எழில் கேட்கிறார்.

அதற்கு கயல் காதலிக்கும் இருவரை பிரிப்பது தவறு என கூற எழில் ஒரு அதிர்ச்சி முடிவு எடுக்கிறார்.
அதாவது எனது மனசை புரிந்துகொள்ளாத உன்னுடன் இனி நான் வாழ மாட்டேன், இதோடு நாம் இருவருக்கும் உள்ள உறவு முடிந்தது என எழில் கயலை தூக்கி எறிந்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார்.
அவரின் இந்த செயல் கண்டு கயல் மிகவும் ஷாக் ஆக குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்புகிறார்கள்.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri