இனி சன் டிவி-ன் NO.1 சீரியல் இது தான் ! ரசிகர்களை கவர்ந்த புதிய தொடர்..
சன் டிவி தொலைக்காட்சி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க கூடிய ஒரு சேனலாக இருந்து வருகிறது.
இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் பெரிய பார்வையாளர்கள் கூட்டம் உள்ளது.
இதனிடையே சன் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கயல்.
இதில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். குடும்ப சுமைகளை தாங்கும் குடும்ப பெண்ணாக கதைக்களத்தை கொண்டுள்ள கயல் சீரியல் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் இந்த தொடர் ஆரம்பித்த முதல் மாதமே 10.66 புள்ளிகளுடன் ரேடிங்கில் முதலிடம் பிடித்தது. தற்போது இத்தொடர் தான் TRP-ல் முதலிடத்தில் இருந்து வருகிறது.
கயல் சீரியலை தொடர்ந்து சுந்தரி, வானத்தை போல உள்ளிட்ட தொடர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.