திடீரென முடிவுக்கு வருகிறது சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல்... ரசிகர்கள் ஷாக்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் ராஜாவாக இருக்கிறது சன் டிவி.
இதில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் தான் இப்போது டாப்பில் உள்ளது. அதேபோல் சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம்.

பெண்கள் பெயரில் தான் பல சீரியல்களின் பெயர்களே உள்ளது. நாளுக்கு நாள் எல்லா சீரியல்களின் பார்வையாளர்களும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளனர். பழைய சீரியல்கள் திடீரென முடிவதும் உடனே புதிய சீரியல் களமிறங்குவதும் வழக்கமாக உள்ளது.
கிளைமேக்ஸ்
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் குறித்த ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம்.
ஒளிபரப்பாக தொடங்கி 6 மாதமே ஆன இந்த சீரியல் முடியப்போகிறது என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். வரும் ஜுலை மாதத்துடன் தொடர் முடிவுக்கு வரலாம் என்கின்றனர்.
