சன் டிவி மகாலட்சுமி சீரியல் புகழ் நடிகை காவ்யாவின் புதிய சீரியல்... விவரம் இதோ
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் வெளியான தொடர்கள் சிலவற்றை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி மக்கள் கொண்டாடிய தொடர்களில் ஒன்று தான் மகாலட்சுமி.
கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் மகாலட்சுமி அரவிந்த் என்பவரை சுற்றிய கதையாகும். காவ்யா சாஸ்திரி, ஹேமந்த், சிந்து சாதனா, லக்ஷ்மி ப்ரியா என பலர் நடித்திருந்தார்கள்.

அப்பா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் மகாலட்சுமி நிச்சயதார்த்தம் முன் ஒரு பெரிய முடிவு எடுக்கிறார். அதன்பின் என்ன ஆகிறது, மகாலட்சுமி வாழ்க்கை மையப்படுத்தி கதை சென்றது.
2 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
புது சீரியல்
மகாலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை காவ்யா சாஸ்திரி. இந்த சீரியலுக்கு பின் தமிழ் பக்கம் இவரை காணவில்லை.
இந்த நேரத்தில் தான் நடிகை காவ்யா சாஸ்திரி தமிழில் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பது குறித்த தகவல் வந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் இந்த புதிய சீரியலை Aura Creations தான் தயாரிக்க இருக்கிறார்களாம்.