மூன்று முடிச்சு சீரியல் நடிகர், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ
மூன்று முடிச்சு
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மூன்று முடிச்சு. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் டாப் 5ல் உள்ளது.

இந்த சீரியலில் சுவாதி கொண்டே, நியாஸ் கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் சுவாதி கொண்டே தமிழில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமி தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் சந்திரன், கிருத்திகா, போராளி திலீபன் என பலரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக மூன்று முடிச்சு உள்ளது.

நடிகர், நடிகைகளின் வயது
இந்த நிலையில், மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மையான வயது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த விவரம்:
சுவாதி கொண்டே - 33 வயது
நியாஸ் கான் - 38 வயது
ப்ரீத்தி சஞ்சீவ் - 49 வயது
கிருத்திகா - 39 வயது
போராளி திலீபன் - 33 வயது
தர்ஷனா - 31 வயது ஸ்ருதி
ஷண்முக பிரியா - 32 வயது