சன் டிவியில் வரும் புது நிகழ்ச்சி.. அந்த அக்கா இவர்தானா?
டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருக்கிறது.
இந்நிலையில் சன் டிவி ஒரு புது நிகழ்ச்சியை தொடங்குவதாக ப்ரோமோ வெளியிட்டு இருக்கிறது. அதில் "யார் அந்த அக்கா?" என guess செய்யும்படி கூறி இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி தயாரிபாளர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் இந்த ஷோவை தயாரிக்கிறது. அதனால் இது புது ரியாலிட்டி ஷோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த அக்கா யார் என்ற கேள்வி வைரலாகும் நிலையில் அது மணிமேகலை தான் என நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் அது சிவாங்கி தான் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.