சன் டிவியின் முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு! காரணம் இதுதான்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
சன் டிவி தொடர்கள் தான் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய சீரியல் நிறைவு பெறுவதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடர் தான் தற்போது முடிவடைகிறது. அதில் ஹீரோவாக அசீம் நடித்து வருகிறார்.
பூவே உனக்காக சீரியலில் கிளைமாக்ஸ் தற்போது ஷூட்டிங் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. கடைசி எபிசோடு விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த ரேட்டிங் பெறுவதால் தான் இந்த தொடரை முடிக்கிறார்கள் என சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்து 10.30 மணி ஸ்லாட்டில் அருவி சீரியல் மீண்டும் மறுஒளிபரப்பு ஆக இருக்கிறது.