சன் டிவியின் ரஞ்சிதமே 3வது சீசன் டைட்டிலை வென்ற பிரபல சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோ
சன் டிவி
எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் ஒருபக்கம் ஹிட்டாக ஓடினாலும் நிறைய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது.
சூப்பர் சிங்கர், சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி ஆர் யூ ரெடி, ரஞ்சிதமே, அண்டாகாகசம், சூப்பர் மாம் இப்படி நிறைய நிகழ்ச்சிகளை கூறிக்கொண்டே போகலாம்.
அதிலும் பாடல் நிகழ்ச்சிகள் தான் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது, எனவே அடுத்தடுத்த சீசன்கள் உடனே வந்துவிடுகின்றன.
இப்போது மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துள்ளது.
ரஞ்சிதமே
சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி, அதில் ரஞ்சிதமே என்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் 3வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது, தற்போது அது முடிவுக்கும் வந்துள்ளது.
இந்த ரஞ்சிதமே 3வது சீசனில் வெற்றிப்பெற்றது பிரபல சீரியல் நடிகை சைத்ரா தானாம். இந்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
