அடுத்தடுத்து 5 சீரியல்களை களமிறக்கப்போகும் சன் டிவி... முழு விவரம்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் கெத்து காட்டும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி.
இதில் பல வருடங்களாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, சில சீரியல்கள் பல சாதனைகளை செய்துள்ளன. இதற்கு போட்டியாக விஜய் மற்றும் ஜீ தமிழிலும் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன, ஆனால் சன் டிவியை பீட் செய்ய முடியவில்லை.
தற்போது சன் டிவி டிஆர்பியில் குறைந்து வரும் சில சீரியல்களை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செல்லமே செல்லமே எனற் புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது.

புதிய சீரியல்கள்
என்னென்ன சீரியல்கள் முடிவுக்கு வருகிறது என சரியாக தெரியவில்லை, ஆனால் ஒளிபரப்பாக தொடங்கும் புதிய சீரியல்கள் குறித்த தகவல் வந்துள்ளது.
துளசி- அருண்குமார்-ஸ்வர்னிகா ஜோடியாக நடிக்க இந்த புதிய சீரியலை சித்திரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இரு மலர்கள்- ஹீமா பிந்து மற்றும் ஜீவிதா நாயகிகளாக நடிக்க இதில் சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறாராம்.
பராசக்தி- விஷன் டைம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலில் பவன் ரவீந்திரா மற்றும் தேப்ஜினி ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்களாம். இந்த 3 தொடர்களை தாண்டி 2 டப்பிங் சீரியல்கள் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.