கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடிக்கப்போகும் புதிய Project... நாயகன் இவரா, புதிய ஜோடி
சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்தவர்.
அந்த தொடர் முடிவுக்கு வர அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
அந்த தொடருக்கு பின் சன் டிவி பக்கம் வந்தவர் கயல் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார், வெற்றிகரமாக சீரியலும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வெப் சீரிஸ்
இந்த நிலையில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி கமிட்டாகியிருக்கும் புதிய Project குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Love Returns என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க குரு லக்ஷமன் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த வெப் சீரிஸை சரிகமப தயாரிக்கிறார்கள்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
