சன் டிவி சீரியல் நாயகி சாண்ட்ரா வாங்கியுள்ள புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை சாண்ட்ரா
சீரியல் நடிகைகள் இப்போது ரசிகர்களின் பேவரெட் பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.
அப்படி சன் டிவியின் பிரியமான தோழி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா பாபு. இவர் மலையாளத்தில் கருதமுத்து என்ற தொடர் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
பின் 2018ம் மக்கள், 2021ம் ஆண்டு Thoovalsparsham, 2022ல் பிரியமான தோழி, 2023ல் Ninnishtam Ennishtam என தமிழ், மலையாளம் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
புதிய வீடு
எல்லோரும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு வைத்திருப்பது போல் இவருக்கும் அந்த ஆசை இருந்துள்ளது. அண்மையில் படு பிரம்மாண்டமாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் சாண்ட்ரா.
தற்போது தனது வீட்டை வீடியோவாக எடுத்து இந்த சந்தோஷ செய்தியை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.