தனது கணவருக்காக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜ் போட்ட அழகிய பதிவு- என்ன பாருங்க
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் தொடர்கள் நிறைய உள்ளது அதில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் பல நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு TRPயில் கொஞ்சம் பின்வாங்கி வந்தாலும் இப்போது மீண்டும் பழைய இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
திருமண நாள்
இந்த தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யா தேவராஜன்.
இந்த தொடரில் இவருக்கு நடந்த திருமண எபிசோடின் போது TRPயில் டாப்பில் வந்தது. இவருக்கு நிஜத்தில் திருமணம் முடிந்துவிட்டது, அண்மையில் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
அதோடு, காதல், சண்டை, பயணம், உடற்பயிற்சிக்கூடம், திரையரங்கம் என வாழ்க்கையை உடன் இருந்து பகிர்ந்துகொள்வோம். நான் உன்னை காதலிக்கும் அளவு மிகப்பெரியது என கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு டுவிட் செய்துள்ளார்.