சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. உச்சகட்ட வருத்தத்தில் ரசிகர்கள்
சன் டிவி
சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

செல்லமே செல்லமே
இந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் செல்லமே செல்லமே. இந்த சீரியலில் ரேஷ்மா, ஜிஷு மேனன் நடித்து வருகிறார்கள்.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பு தொடங்கிய நிலையில், தற்போது செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது செல்லமே செல்லமே சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. இதுவரை 100 எபிசோட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.