கிளைமேக்ஸை எட்டிய சன் டிவியின் முக்கிய சீரியல்.. கடைசிநாள் படப்பிடிப்பு தள போட்டோ இதோ
சன் டிவி
சன் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் புன்னகை பூவே.
மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால் மற்றும் சைத்ரா சக்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இடையில் சைத்ரா சக்காரி சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் ஐஸ்வர்யா நடிக்க கமிட்டானார்.
இவர் தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கிளைமேக்ஸ்
வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். விரைவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.
சீரியல் ஒரு அழகிய கொண்டாட்டத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இதோ கடைசி நாள் படப்பிடிப்பு தள போட்டோ,