கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்கள்- என்னென்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி சன். இதில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு இந்த தொலைக்காட்சி தொடர்களே முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.
காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சீரியல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகும், இடையில் 3 மணி நேரம் மட்டும் திரைப்படம் ஒளிபரப்பாகும்.
சன் டூ கலர்ஸ்
இந்த தொலைக்காடசியில் தங்களது சீரியல் ஒளிபரப்பாக வேண்டும் என எத்தனையோ தயாரிப்பு நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி பிரபல தயாரிப்பு நிறுவனம் மூலம் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்கள் தென்றல் மற்றும் கோலங்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த கோலங்கள் மற்றும் தென்றல் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
ஆனால் சன் டிவியில் இல்லை கலர்ஸ் தமிழில் தான் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?