சன் டிவியா கொக்கா.... கெத்து காட்டுறாங்க பா- டாப் சீரியல்களின் விவரம்
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கே பெயர் போன ஒரு டிவி. இந்தியாவிலேயே அதிக TRP கொண்ட தொலைக்காட்சிகளில் பல பல வருடங்களாக முதல் இடத்தில் உள்ளது சன் டிவி.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக சன் தொலைக்காட்சி முதல் இடத்தை பிடிக்க தவறியிருந்தது, அந்த நேரத்தில் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மா தொடர் மூலம் முதல் இடத்தை பிடித்து வந்தன. தற்போது சன் மீண்டும் அதன் கெத்தை காட்ட ஆரம்பித்துள்ளது,
கயல் தொடர் மூலம் தொடர்ந்து தமிழகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. சரி இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியின் டாப் 10 தொடர்களின் விவரத்தை பார்ப்போம், இப்போது சன் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களின் விவரத்தை பார்ப்போம்.
10வது இடம் தாலாட்டு
கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீலதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க கொஞ்சம் விறுவிறுப்பு இல்லாத ஒரு கதையாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர்களுக்காக தொடர் மக்களிடம் கொஞ்சம் ரீச்.
9வது இடம் அருவி
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட ஒரு புத்தம் புது சீரியல். கன்னட மொழித் தொடரான கஸ்தூரி நிவாசா என்ற தொடரின் ரீமேக் இது. புது சீரியல் என்பதால் அதிக புரிதல் இல்லை.
8வது இடம் அன்பே வா
புதுமுகங்கள் பலர் நடிக்க ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இந்த தொடர் சில முக்கியமான திருப்பங்கள் வந்த நேரத்தில் டிஆர்பியில் முன்னிலையில் இடம்பெற்றிருந்தன.
எதிர்நீச்சல்-அபியும் நானும் 7 மற்றும் 6வது இடம்
எதிர்நீச்சல் பெண்களை மையப்படுத்தி புதியதாக தொடங்கப்பட்டது, எனவே தொடரின் கரு எப்படி போகும் என்பது தெரியவில்லை. அபியும் நானும் இது குழந்தைகளை வைத்து கதை நகர்வதால் மக்களிடம் சாதாரண வரவேற்பு பெற்று வருகின்றன.
5வது இடம் கண்ணான கண்ணே
அப்பா-மகள் பாசத்தை வைத்து நகரும் கதை. அப்பா எப்போது மகளை ஏற்றுக்கொள்வார் என்பதிலேயே கதை நகர்கிறது.
4வது இடம் ரோஜா
அர்ஜுன்-ரோஜா இவர்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. அதிலும் இந்த தொடரில் வரும் நீதிமன்ற காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். சன் டிவியில் பல வாரங்கள் முதல் இடத்தை பிடித்து வந்த இந்த தொடர் இப்போது பின்வாங்கி வருகிறது.
3வது இடம் வானத்தைப் போல
சின்ராஜ-துளசி அண்ணன் தங்கை சுற்றியே கதை. தனது தங்கைக்காக எதையும் செய்ய துணியும் அண்ணன். துளசியின் திருமண வாரங்களில் டிஆர்பியில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது. இப்போது நடிகர்கள் மாற்றத்திற்கு பிறகும் நன்றாக ஓடுகிறது, 3வது இடத்திலும் உள்ளது.
2வது இடத்தில் சுந்தரி
பெற்றோர்கள் சம்மதத்துடன் கட்டின மனைவியை ஏமாற்றி தனக்கு பிடித்தவளுடன் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தும் நாயகன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருந்த சுந்தரி இப்போது வேறொரு தைரியமான பெண்ணாக மாறி நடத்தும் போராட்டத்தை பேசுகிறது சுந்தரி.
1வது இடத்தில் கயல்
புதுமுகங்கள் ஜோடி சேர்ந்து நடிக்கும் தொடர். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிக்கும் இந்த தொடர் அண்மையில் தொடங்கப்பட்டது. ஆரம்பம் ஆன நாள் முதல் தொடர் உச்சத்திலேயே தான் உள்ளது.