சன் டிவி முக்கிய சீரியல்களின் நேரம் விரைவில் மாற்றம்.. காரணம் இதுதான்
சன் டிவியின் சீரியல்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. டாப் 5 லிஸ்டில் அனைத்து இடங்களையும் சன் டிவி தான் பிடித்து இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது.
சீரியல்கள் நேரம் மாற்றம்
இந்நிலையில் விரைவில் மல்லி என்ற ஒரு புது சீரியலை சன் டிவி தொடங்க இருக்கிறது. அந்த சீரியல் இரவு 9 மணி ஸ்லாட்டில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதனால் மற்ற சில சீரியல்களின் நேரமும் மாற்றம் அடைய இருக்கின்றன. 9 மணிக்கு ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் இனி 9.30க்கு வரும்.
9.30க்கு வந்துகொண்டிருந்த இனியா இனி 10.30க்கு வர போகிறது. நேரம் மாற்றம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.