சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சன் டிவி
ரசிகர்கள் சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்து வரும் நிலையில் எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய வித்தியாசமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் சீரியல்களின் ராஜா என்றால் அது சன் டிவி தான். சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் தொடர்களின் மகா சங்கமம் நடந்தது, அதன் டிஆர்பியும் பெரிய அளவில் வந்தது.
அடுத்த சங்கமம்
இரண்டு சீரியல்கள் இணைய டிஆர்பி டாப்பில் வந்ததால் இப்போது சன் டிவி வேறொரு பிளானில் வந்துள்ளனர்.
அதாவது 3 சீரியல்களின் சங்கமம் நடக்க உள்ளதாம். எந்தெந்த தொடர்கள் என்றால் அன்னம், கயல், மருமகள் தொடர்களின் Triveni சங்கமம் தான் நடக்க இருக்கிறதாம்.
வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் இருந்து இரவு 7 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த 3 சீரியல்களின் சங்கமத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.