ஏறிக்கொண்டே போகும் சன் டிவி சீரியல் TRP, விஜய் சீரியல்கள் என்ன ஆனது தெரியுமா?
சீரியல்கள்
சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. TRP விவரம் வாரா வாரம் வெளியாகிறது, அதில் டாப் 10 என்று எடுத்தால் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் இருக்கும், விஜய் டிவி தொடர்கள் சிலதே இருக்கும்.
அப்படி கடந்த வாரத்திற்கான விவரம் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் சன் டிவி சீரியல் தான் டாப்பில் உள்ளது. மற்ற டாப் 10 லிஸ்டில் நிறைய மாற்றங்கள் உள்ளது.
சரி டாப் 10ல் இருக்கும் தொடர்களின் விவரங்களை காண்போம். சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தை போல, இனியா, சிறகடிக்க ஆசை, நல்லதொரு குடும்பம், பாக்கியலட்சுமி, ஆஹா கல்யாணம்.
இந்த தொடர்களின் TRP விவரங்களை பார்த்த ரசிகர்கள் என்ன எதிர்நீச்சல் தொடரின் பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்றும், சிறகடிக்க ஆசை விஜய் டிவி சீரியல்களின் டாப்பில் உள்ளதா சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.