டிஆர்பி-யில் கயலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! எதிர்பார்க்காத ஒரு தொடர்
தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தொடர்கள் தான் முதல் ஐந்து இடங்களையும் பிடித்து வருகின்றன. விஜய் டிவி தொடர்க்களும் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
விஜய் டிவியின் டாப் சீரியல் சிறகடிக்க ஆசை பெறும் ரேட்டிங்கை விட சன் டிவியின் ஏழு அல்லது எட்டு சீரியல்கள் அதிகம் ரேட்டிங் பெறுகின்றன.

கயலை பின்னுக்கு தள்ளிய சிங்கப்பெண்ணே
வழக்கமாக கயல் சீரியல் தான் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதை புது சீரியலான சிங்கப்பெண்ணே பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இது எதிர்பார்க்காத விஷயம் என சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருக்கின்றனர்.
ஒரு அப்பாவி கிராமத்து பெண் வேலைக்காக தனியாக நகரத்துக்கு வரும் போது வேலை செய்யும் இடத்தில் மற்றும் தங்கும் இடத்தில் சந்திக்கும் சிக்கல்கள் தான் சிங்கப்பெண்ணே சீரியலில் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri