சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யார் அவர்?
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் டிஆர்பியில் டாப்பில் இருந்து வரும் சீரியல் சிங்கப்பெண்ணே.
கிராமத்தில் தைரியமாக வலம் வந்த ஒரு பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பாதிக்க சென்னை வருகிறார். கார்மென்ட்ஸில் வேலை செய்ய ஆரம்பித்த ஆனந்தி ஒவ்வொரு நாளுமே நிறைய சவால்களை சந்தித்து வருகிறார்.
இப்போது கதைக்களத்தில் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்துகொள்ள போராடி வருகிறார். இதற்கு இடையில் அன்புவின் அம்மா 3 மாதத்தில் உனக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்.
நியூ என்ட்ரி
என்னை காதலித்து அன்பு அவரது வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ள நான் அவரை எப்படி திருமணம் செய்ய முடியும் என அதிர்ச்சி முடிவு எடுக்கிறார்.
இதற்கு இடையில் அன்புவின் மாமா பெண் துளசி அவரது வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.
துளசியாக நடிகை பூஜிதா சிங்கப்பெண்ணே சீரியலில் நியூ என்ட்ரி கொடுக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் தொடரிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.