ஆனந்திக்கு ஜோசியரால் வந்த சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என தெரியாமல் தொடர்ந்து குமுறிக்கொண்டிருக்கிறார். மயக்க மருந்து கலந்துகொடுத்து தன்னை சீரழித்தது யார் என அவர் குழப்பத்தில் இருக்கிறார்.
அதனால் அவர் காதலர் அன்புவிடம் இருந்து விலகியே இருக்கிறார். அன்புவின் அம்மாவும் ஆனந்திக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை என்றாலும் ஆதரவாக இருக்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அன்புவின் அம்மா ஒரு ஜோசியரை சந்திக்கிறார்.
இன்னும் 3 மாதத்தில் அந்த பெண் கழுத்தில் அன்பு தாலி கட்டியே ஆக வேண்டும் என அவர் கூறுகிறார். அவரும் அதை அன்புவிடம் சொல்லி ஆனந்தியிடம் சொல்ல சொல்கிறார்.
இதனால் ஆனந்திக்கு அடுத்த சிக்கல் தொடங்கி இருக்கிறது. ப்ரோமோவை பாருங்க.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
