ஆனந்திக்காக காத்திருக்கும் அன்பு, ஆனால் வந்தது.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு சொல்லாமலேயே அன்பு திடீரென அவரது கழுத்தில் தாலி கட்டிய பிரச்சனை தான் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது.
ஆனந்தியும் அன்புவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அன்பு அம்மாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி ஆனந்தியின் அக்கா கணவர் உடன் இருந்து வருகிறார்.
ஆனந்தி தன்னை பார்க்க வரும் வரை சாப்பிட மாட்டேன் என தொடர்ந்து கூறி வருகிறார் அன்பு.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் இன்றய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அன்பு ஆனந்தி நிச்சயம் தன்னை பார்க்க வருவாள் என நம்பிக்கையுடன் சொல்கிறார்.
ஆனால் வில்லி துளசி தான் அங்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறார். அன்புவை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்று விடலாம் என அவர் அன்பு அம்மாவிடம் ஏற்கனவே சொன்ன நிலையில், அது நடக்குமா? எபிசோடில் பார்க்கலாம்.
ப்ரோமோ இதோ.