அன்பு சொன்ன அதிர்ச்சி உண்மை.. சன் டிவி 'சிங்கப்பெண்ணே' இன்றைய எபிசோடு ப்ரோமோ
ஆனந்தி கர்ப்பமாக இருப்பது மொத்த ஊருக்குள் தெரிந்துவிட்ட நிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என நிரூபிப்பதாக சவால் விட்டுவிட்டு வந்திருக்கிறார் ஆனந்தி.
அவரது அக்காவின் வாழ்க்கையில் இதில் தான் இருக்கிறது. அவர் எப்படி உண்மையை கண்டுபிடிப்பார். மகேஷ் செய்த தவறு எப்போது எல்லோருக்கும் தெரியவரும் என சீரியல் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இன்றைய எபிசோடு ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ஆனந்தி உண்மையை கண்டறிய தானும் உதவ போவதாக அன்பு கூறுகிறார்.
மேலும் ஆனந்தியிடம் அவர் பேசும்போது ஒரு உண்மையை கூறுகிறார். ஆனந்திக்கு நடந்த கொடுமையை தன்னால் தடுத்திருக்க முடியும் என கூறுகிறார்.
அவருக்கு தெரிந்துதான் அந்த சம்பவம் நடந்ததா? ப்ரோமோவை பாருங்க.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
