ஆனந்தி கையில் ஆதாரம்.. வசமாக மாட்ட போகும் மித்ரா! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு உண்ணாவிரதம் இருந்தும் இறுதியில் அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது.
மறுபடியும் அன்பு அவரது அம்மாவுடன் வீட்டுக்கு செல்லும் நிலை வந்துவிட்டது. போகமாட்டேன் என கூறிய அன்புவை ஆனந்தி தான் பேசி அனுப்பி வைக்கிறார்.

இன்றைய ப்ரோமோ
ஆனந்தியை நேரில் பார்த்தாலே தனது உடம்பு பாதி சரியாகிவிடும் என அன்பு சொல்ல அவரது அம்மா மற்றும் வில்லி துளசி ஷாக் ஆகின்றனர்.
மறுபுறம் ஹாஸ்டலில் மித்ரா போன் பேசும்போது ஆனந்தி அங்கு திடீரென வர அவர் ஷாக் ஆகிறார். அதன் பின் ஆனந்தியின் அக்கா பேசும்போது அவரது கர்ப்பம் பற்றிய விஷயத்தில் ஏன் ஒரு பெண் சம்மந்தப்பட்டு இருக்கிற கூடாது என ஆதாரத்தை கொடுக்கிறார்.
அதனால் மித்ரா மீது ஆனந்திக்கு சந்தேகம் எழுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.