ஞாயிறு ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் சூப்பர் ஹிட் படங்கள்
சன் டிவி
தமிழ் சின்னத்திரை என்று எடுத்தாலே முதலில் தமிழக மக்களுக்கு நியாபகம் வருவது சன் டிவி தான். 32 வருடங்களாக மக்களின் நம்பிக்கையை பெற்று நம்பர் 1 தொலைக்காட்சியாக தமிழ் சின்னத்திரையில் ராஜ்ஜியம் செய்து வருகிறது.
அந்த காலத்தில் எல்லாம் புதுப்படங்கள் என்றாலே அது சன் டிவியில் தான் வரும் என்ற எண்ணம் இருந்தது.
ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஹிட் படங்களாக ஒளிபரப்பி டிஆர்பியில் நாளுக்கு நாள் முன்னேறி வந்தார்கள். இப்போதும் சீரியல்கள் மூலம் நம்பர் 1 தொலைக்காட்சியாகவே உள்ளது.

படங்கள்
ஏப்ரல் மாதம் துவங்கி முதல் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. சரி சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 5 என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை காண்போம்.
காலை 9.30 மணிக்கு விக்ரம்-ஜோதிகா நடித்துள்ள அருள் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம். அடுத்து பிற்பகல் 3 மணிக்கு லத்தி சார்ஜ் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

பின் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக போகும் படம் தான் சூப்பர் ஹைலைட். அதாவது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ரஜினி, நக்மா, ரகுவரன் என பல நடிகர்கள் நடித்த பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu