திருமண காட்சியுடன் சன் டிவியின் சுந்தரி சீரியல் முடிந்தது... வெளியான கடைசிநாள் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்
சுந்தரி
சன் டிவியின் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருந்துவந்த தொடர் சுந்தரி.
கடந்த பிப்ரவரி 2021ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. இரண்டு சீசன்களையும் சேர்த்து இந்த தொடர் 1120 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
சில மாதங்களாகவே இந்த சுந்தரி தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
முடிந்த சீரியல்
இந்த நிலையில் சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு விஷயம் வந்துள்ளது.
அதாவது டிஆர்பியில் டாப் 5ல் வந்துகொண்டிருந்த இந்த சுந்தரி சீரியல் முடிவை எட்டிவிட்டது. இன்று தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பும் முடிந்துள்ளது.
சுந்தரி திருமணத்துடன் இந்த தொடரை முடித்துள்ளனர், கடைசிநாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
