புதிய சாதனை படைத்துள்ள சன் தொலைக்காட்சியின் சுந்தரி சீரியல்- கொண்டாடும் ரசிகர்கள்
சுந்தரி சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. டாப் 5ல் சிங்கப்பெண்ணே, கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி போன்ற தொடர்கள் உள்ளன.
சிங்கப்பெண்ணே தொடர் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது, கயல் 2வது இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் தொடர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கொஞ்சம் டல் அடிக்கிறது என்றாலும் கதையின் விறுவிறுப்பால் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த தொடர் கூட விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய சாதனை
தற்போது என்ன தகவல் என்றால் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் ஒரு சாதனை படைத்துள்ளது. கணவனால் ஏமாற்றப்பட்ட ஒரு கிராமத்து பெண் படித்து, சாதனை செய்து இப்போது ஒரு கலெக்டராக வலம் வருகிறது.
அவர் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள் குறித்து தொடரில் காட்டப்படுகிறது.
இப்போது என்ன விஷயம் என்றால் சுந்தரி சீரியல் 1000 எபிசோடுகளை எட்டியுள்ளதாம். இந்த தகவல் வெளியாக மக்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.