பல கோடி மதிப்புள்ள பிரபல OTT தளத்தை வாங்க சன் டிவி முயற்சி.. எந்த OTT தெரியுமா
சன் டிவி
சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர்கள் தான் தமிழ்நாட்டில் டாப் 5 தொடர்களாக இருக்கிறது.
இந்த சன் டிவி குழுமத்தில் கே டிவி, ஆதித்யா டிவி, சன் ம்யூசிக், சன் நியூஸ் என பல தொலைக்காட்சிகள் உள்ளன.
OTT தளம்
இந்நிலையில், சன் டிவி நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஆம், சன் டிவி பல கோடி மதிப்புள்ள பிரபல OTT தளத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்களாம்.
அது வேறு எந்த OTT தளமும் இல்லை, ஹாட்ஸ்டார் தான். ஆம், ஹாட்ஸ்டார் OTT தளத்தை கைப்பற்ற தான் சன் டிவி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. டிஸ்னி ஸ்டார் நிறுவனத்திடம் இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
ஒருவேளை இது நடந்தால் விரைவில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
