சன் டிவியின் டாப் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
சீரியல்களின் ராஜாவாக தமிழ் சின்னத்திரையில் சன் டிவி கலக்கி வருகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து விதவிதமான சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியில் டாப்பில் எப்போதுமே சன் டிவி சீரியல்கள் தான் முதல் 5 இடத்தை பிடிக்கும்.
சமீபத்தில் சன் டிவியில் செல்லமே செல்லம் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது, இதில் ரேஷ்மா முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.

மெகா சங்கமம்
இப்போது எல்லா சீரியலிலும் பொங்கல் கொண்டாட்ட காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
சீரியல்களின் புரொமோவும் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது சன் டிவியில் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கப்போகிறதாம்.