TRPயை ஏத்த சன் டிவி போட்ட பிளான் - இந்த வாரம் என்னென்ன படங்கள் ஒளிபரப்பு ஆகிறது தெரியுமா
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது TRP உச்சத்தில் இருக்கும் ஒரே தொலைக்காட்சி சன் டிவி தான்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தொடர்ந்து பல வாரங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறது.
மேலும் சன் தொலைக்காட்சியில் வாராவாரம் இறுதியில் ஒளிபரப்பாகும் படங்களும் சன் டிவியின் TRP எகிற காரணமாக இருக்கிறது.
ஆம் சென்ற வாரம் கூட, தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் இரு சூப்பர்ஹிட் படங்களை சன் டிவி ஒளிபரப்பு செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ரஜினியின் முத்து மற்றும் ஆர்.ஜெ. பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி ஆகிய, மற்றும் அரண்மனை 2 உள்ளிட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனால் இந்த வாரமும் சன் டிவியின் TRP தான் முன்னனிலையில் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.