லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங்! டாப் 5ல் ஒரு விஜய் டிவி சீரியல் கூட இல்லை
டிவி சேனல்களுக்கு நடுவில் பரபரப்பாக நடந்து வரும் டிஆர்பி போட்டியில் எப்போதும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிகம் போட்டி இருக்கும். அதிலும் குறிப்பாக டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் எப்போதும் சன் டிவி ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மட்டும் அவ்வப்போது முதலிடத்தை பிடிப்பது உண்டு.
ஆனால் கடந்த வாரம் (25th December 2021 To Friday, 31st December 2021) டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்டில் ஒரே ஒரு விஜய் டிவி சீரியல் கூட இல்லை.
முதலிடத்தில் கயல் 11.06 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்து வானத்தைப்போல 10.86 புள்ளிகள் உடன் இருக்கிறது. அதற்கடுத்த இடங்களில் ரோஜா, சுந்தரி மற்றும் கண்ணான கண்ணே ஆகிய சீரியல்கள் இருக்கின்றன.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி ஆறாவது இடத்திலும், பாரதி கண்ணம்மா ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.
டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ..
- கயல் - 11.06
- வானத்தைப்போல - 10.86
- ரோஜா - 10.71
- சுந்தரி - 10.50
- கண்ணானகண்ணே - 10.46
- பாக்கியலட்சுமி - 9.25
- பாரதி கண்ணம்மா - 9.25
- பாண்டியன் ஸ்டோர்ஸ் - 9.20
- அன்பே வா - 8.05
- அபியும் நானும் - 8.02