விஜய் டிவிக்கு போட்டியாக சன் இறக்கிய புதிய சீரியல்- ஒரே மாதிரி இருக்கே, காப்பியா,புகைப்படம் இதோ
தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய்க்கு தான் கடும் போட்டி நடக்கிறது. பல வருடங்களாக சன் தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள்.
அந்த போராட்டத்தில் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என்றே கூறலாம். விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பல மாதங்களாக TRPயில் இரண்டாம் இடத்தை பிடித்து வந்தது.
இந்த சீரியல் ஆரம்பத்தில் கருப்பு நிற நாயகி என்கிற விளம்பரத்துடன் தான் தொடங்கியது, இப்போது அந்த கான்செப்டில் இருந்து டிராக் மாறியுள்ளது.
இப்போது சன் தொலைக்காட்சியும் கருப்பு நிற நாயகி என்ற அடையாளத்தோடு சுந்தரி என்ற சீரியலை தொடங்க உள்ளனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் போல லட்சுமி ஸ்டோர்ஸ் வந்தது மாதிரி பாரதி கண்ணம்மா Vs சுந்தரியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.