சிறுவயது போட்டோவில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?... ஹிட் சீரியல் நடிகை தான்
சீரியல்
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு விஷயம் மிகவும் வைரலானது.
அது என்னவென்றால் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான், கொரோனா காலகட்டத்தில் வெள்ளித்திரை பிரபலங்களின் புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தது. அதன்பின் சின்னத்திரை பிரபலங்கள் போட்டோக்களும் வைரலாகி வந்தது.

சமீபத்தில் சினிஉலகம் பக்கத்தில் நிறைய சீரியல்களில் வில்லியாக நடித்த நடிகை வந்தனாவின் சிறுவயது போட்டோக்கள் பார்த்தோம். இப்போது இன்னொரு சின்னத்திரை நடிகையின் போட்டோ வெளியாகியுள்ளது.
யார் அவர்
இந்த நடிகை சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஒரு சீரியலில் மொத்தமாக வில்லி, இன்னொரு சீரியலில் சூழ்நிலையால் வில்லியாக மாறப்பட்டவராக நடிக்கிறார்.

தற்போது இந்த நடிகை நடிக்கும் ஒரு சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது, எந்த தொடர் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வினோதினி தான்.
இந்த தொடர் சொன்னதுமே சிறுவயது போட்டோவில் இருப்பவர் யார் என்று தெரிந்திருக்குமே, ஆமாம் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் நடிகை சல்மா தான் இது.
