பாலிவுட் செல்லும் சுந்தர்.சி!! இந்தியில் அரண்மனை திரைப்படம்.. ஹீரோ யார் தெரியுமா
அரண்மனை 4
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை 4 வெளிவரவுள்ளது. இப்படத்தின் சில போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்த நிலையில், விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சுந்தர்.சி, சந்தோஷ், தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழில் தொடர்ந்து படங்கள் எடுத்து வந்த இயக்குனர் சுந்தர்.சி, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்லப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் அரண்மனை
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குனர் சுந்தர்.சியை அழைத்து கதை கேட்டுள்ளாராம். அரண்மனை படத்தை இந்தியில் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தமிழ் சூப்பர்ஹிட்டான காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்திருந்தார் அக்ஷய் குமார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை அங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu